மேற்கு நோர்வே – யாழ்ப்பாணம் பல்கலைக் கழகங்கள் இணைந்து முதுமானிக் கற்கைகள் அங்குராப்பணம்

images 3 2
images 3 2

எதிர்காலத்தை இலங்கை எதிர் நோக்கியிருக்கையில் இக் கற்கைநெறியின் தொடக்கமானது இலங்கையில் தூயசக்தி உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பதற்கு வலுச்சேர்க்கும். தேர்ச்சியும் வினைத்திறனும் அறிவும் கொண்ட பணியாளர்கள் தூயசக்தி தொழிநுட்பத்தின் பரவலுக்கு அவசியமாகும். அத்தேவையை அறிந்து அதைப் பூர்த்திசெய்து கேள்விச் சந்தைக்குரிய மனிதவளங்களை தரத்துடன் வழங்குவதும் இக் கற்கை நெறியின் நோக்கமாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து இதற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்துள்ளன. இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வளவாளர்கள் விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள். இக்கற்கையில் சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முதுதத்துவமாணி கலாநிதிப் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வாய்புக்கள் வழங்கப்படும். அவ்வாய்ப்புக்களைப் பெறும் மாணவர்கள் நோர்வேஜியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்காலங்களைப் பெறுவார்கள்.

இந்த முதுமானிக்கற்கை நெறியானது இரண்டு வகைப்பட்டது. ஒன்று ஓராண்டுகால கற்கைகளை மட்டும் கொண்ட தூயசக்தித் தொழிநுட்ப முதுமானி