27 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

unnamed 21
unnamed 21

சேவை தேவை காரணமாக 27 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலையடுத்து இவ்வாறு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் மத்திய மற்றும் ஊவா மாகாண சிரேஷ்ட உப பொலிஸ்மா அதிபர்களும் உள்ளடங்குவர்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொறுப்பான உப பொலிஸ்மா அதிபர் உட்பட 11 உப பொலிஸ்மா அதிபர்கள், 11 பொலிஸ் அத்தியட்சகர்கள், இரு பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உப பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.