நாடளாவிய ரீதியில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

78ace1df 487574 550x300 crop
78ace1df 487574 550x300 crop

பாதாள உலக குழு உறுப்பினர் புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவி அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் முகத்துவாரத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்கேத்திற்குரியவர்களிடம் இருந்து 30 கிராம் 322 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 5 கையடக்க தொலைபேசிகளும் 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புளுமெண்டல் சஞ்சீவவின் மனைவியான 42 வயதுடைய கீதா என அழைக்கப்படும் கீதாஞ்சலி அவரின் 20 வயதுடைய மகன் ஜனந்த மற்றும் அவருடைய நண்பரும் முகத்துவாரம் – சேனமுல்ல பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள பெண்ணொருவருடன் இணைந்து சந்தேகத்திற்குரியவர்கள், ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்த்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புளுமெண்டல் சஞ்சீவ 2006 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர், புளுமெண்டல் சங்க என்ற பாதாள உலக குழு தலைவரிடம் இருந்து அந்த காலப்பகுதியில் விலகியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன்; தொடர்புடைய குழுவின் உறுப்பினருமான கல்கிஸ்ஸை ரொஹாவின் மேலும் ஒரு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கந்தானை பகுதியில் வைத்து சந்தேகத்திற்குரியவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து டி-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட மேலும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன்; தொடர்புடைய குழுவின் உறுப்பினர் கல்கிஸ்ஸை ரொஹா கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.