கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும்

1600712419 work 2
1600712419 work 2

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வார விடுமுறை தினமான நேற்று (20) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே குறித்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் சார் உற்பத்திகள் தொடர்பான ஏற்றுமதி நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் சில முறைகேடுகளை களைவதற்கு தீர்க்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் கடலுணவு ஏற்றுமதியில் 80 வீதமான வருமானத்தை நாட்டிற்கு ஈட்டித் தருகின்ற ரூனா வகை மீன்கள் உலக வெப்ப மயமாதல் காரணமாக அருகி வருகின்ற நிலையில் தொடர்ந்தும் மீன்பிடி படகுகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ளவதைவிட கடலில் பிடிக்கப்படுகின்ற மீன்களை பாதுகாப்பாக கரைக்கு எடுத்து வருதல் மற்றும் பதனிடுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினர்.