ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது !

cropped heroin 1

நாட்டின் இரு வேறு பகுதிகளில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பாதாள உலக குழு உறுப்பினரான களு துஷாரவின் உதவியாளர் ஒருவர் 58 கிராம் ஹெரோயினுடன் கொத்தட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் 9 சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 300 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் .