பொதுமக்களின் துன்பங்களை போக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்

sajith 001
sajith 001

தனது நிருவாகத்தின் கீழ் ஒரு தேசிய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி பொதுமக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (Oct.29) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பொது மக்களை கேந்திரமாக கொண்ட சிறந்த பொதுச் சேவையை மேற்கொள்ள தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் உள்ள அனைத்து பிரதேச சபை அலுவலகங்களிலும் ஜனாதிபதி அபிவிருத்தி பிரிவொன்றை ஸ்தாபித்து, அனைத்து தேர்தல் பிரிவுகளிலும், அனைத்து பிரதேச செயலக பிரதேசங்களிலும் பொதுமக்களின் தனிநபர் துன்பத்தை தெரிவிக்க, பொது பரிந்துரைகளை முன்வைக்க எனது தனிப்பட்ட அதிகாரிகள் குழுவொன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஸ்தாபிக்கப்படும்.

அதன் ஊடாக நிச்சயமாக பொதுமக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.