43 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

airport
airport

கொரோனா வைரஸ் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கட்டார் மற்றும் இந்தியாவில் சிக்கித் தவித்த 43 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார் தோஹாவிலிருந்து 42 பேரும் இந்தியாவின் மும்பையிலிருந்து ஒருவரும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்த 162 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம், பூசா, பெரியகாடு, பெல்வெஹெரா, நீர்கொழும்பு மற்றும் ராஜகிரியா ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தே இவர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். 

43,895 நபர்கள் இதுவரை கட்டாய கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர். மேலும் 7,120 பேர் முத்தரப்பு படைகள் பராமரிக்கப்பட்டு வரும் 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண நேற்று மாத்திரம் நாட்டில் 1,530 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.  பெப்ரவரி முதல் இதுவரை 270,881 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.