வவுனியா புகையிரதப்பாதை அமைப்பதற்குரிய கால அவகாசம் நிறைவு- நடவடிக்கை எடுக்கப்படவில்லை

IMG ae6dbd9fefd984f7f8e22c3fe1579c5b V 1
IMG ae6dbd9fefd984f7f8e22c3fe1579c5b V 1

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதிய புகையிரதக்கடவை பாதை ஒன்று அமைப்பதற்கு புகையிரதத்திணைக்களம் , ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்கம் ,ஓமந்தை பொலிசார் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்கும் இணைத்தலைவருமான கு.திலீபன் , தமிழ் தெற்கு பிரதேச சபைத்தவிசாளர் . பிரதேச சபை உறுப்பினர் . முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்று வழிப்பாதை அமைப்பதற்கு முடிவு எட்டப்பட்டிருந்ததுடன் அதனை நிறைவு செய்துகொள்வதற்கு ஒரு மாதகாலம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது .

IMG ae6dbd9fefd984f7f8e22c3fe1579c5b V 1
IMG ae6dbd9fefd984f7f8e22c3fe1579c5b V 1


இந்நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் அப்பாதை அமைப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனை உடனடியாக அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர் . 
இவ்விடயம குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கும்போது,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து உறவினர்களை பார்வையிடுவதற்காக கார் ஒன்றில் நால்வர் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புகையிரதக்கடவையை கடந்தபோது எதிரே வந்த புகையிரதம் காருடன் மோதியபோது அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.


இதையடுத்து அப்புகையிரத கடவை பாதுகாப்பு அற்றதாகவும் அதனை மூடுவதற்கு புகையிரத திணைக்களம் முடிவு எடுத்தது . இதையடுத்து பல்வேறு இழுபறி நிலைகளுக்கு பின்னர் கடந்த மாதம் அப்பாதையை மூடிவிட்டு அதற்கு மாற்றீடாக சற்றுத் தொலைவில் புதிய புகையிரதக்கடவை ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் இணைந்து ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக அங்கு பாதையை அமைப்பதற்கு தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக அங்கு வாக்குறுதியளித்திருந்தார் இதில் கலந்து கொண்ட புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள்  இப்புதிய பாதையின் பணிகளை ஆரம்பித்து நிறைவு செய்துகொள்வதற்குரிய கால அவகாசம் ஒரு மாதம் வழங்கப்பட்டடிருந்தது.


தற்போது ஒரு மாதம் கடந்தும் புகையிரதப்பாதை அமைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.