முல்லைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த கோரிக்கை

received 341400603865721
received 341400603865721

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கல்விளான் கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

received 341400603865721
received 341400603865721


துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்தை சூழவும் பாலியாறு செல்கிறது இந்த பாலியாறு தமது கிராமத்தை சூழ ஓடுவதன் காரணமாக கிராமத்தில் உள்ள கிணறுகளில் போதியளவு நீர் இருந்து விவசாயத்தை மக்கள் மேற்கொண்டு வந்ததோடு தமது வாழ்வும் சீராக இருந்ததாகவும்கடந்த சுமார் 6 வருடங்களாக அந்த சீரான வாழ்வு பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

received 4561024527271743
received 4561024527271743

குறிப்பாக இந்த பாலியாறு பகுதியில் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வருகின்ற பாரிய மணல் கொள்ளையின்  காரணமாக குறித்த பாலியாறு பல மடங்கு ஆக்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்த ஆற்றில் மணல் அகழ்வு காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு அதனுடைய ஆற்றுப்படுக்கைகளும் பாரியளவில் தோண்டப்பட்ட நிலையில் பாலியாறு  பல்வேறு சேதங்களை சந்தித்து வருகின்றது.

received 662425474381132
received 662425474381132


குறித்த ஆற்றில் மணல் கொள்ளையர்களால் ஆழமாக படுகின்ற நிலைமையில் தமது கிராமத்தில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து விடுவதோடு விவசாயத்திற்கு போதிய நீர் வசதி இல்லாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்
.

received 3664997900178472
received 3664997900178472

இவ்வாறான நிலைமை தொடர்ச்சியாக இருக்கின்ற பட்சத்தில் தாம் இந்த கிராமத்தில் வாழ முடியாத நிலைமை ஏற்படும் எனவும் இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

received 374590506902679
received 374590506902679


குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்


இவ்வாறான நிலைமை நீடித்ததன் பின்னணியில் கிராம மக்கள் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை அவர்கள் கைது செய்து சென்றுள்ளனர்.

received 614852322465654
received 614852322465654

தொடர்ச்சியாக தமது கிராமத்தில் இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் குறித்த பகுதியில் நீரில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருவதாகவும் எனவே தமது எதிர்கால நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்