நியூ டயமன்ட் கப்பல் குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

MT NEW DIAMOND 5
MT NEW DIAMOND 5

தீப்பரவலுக்குள்ளான எம்.ரி. நியூ டயமன்ட் கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எம்.ரி. நியூ டயமன்ட் கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக குறித்த அறிக்கையில், கடல் மாசடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு கடல் பாதுகாப்பு அதிகார சபை நிபுணர்; குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதேவேளை நாட்டின் கடற்பரப்பில் தீப்பற்றலுக்குள்ளான எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தல் மற்றும் அதற்கான நடவடிக்கைகளுக்காக 440 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என சட்டமா அதிபர் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக சட்டமா அதிபரால் 340 மில்லியன் ரூபா கோரப்பட்டிருந்தது.

அந்த நிதியை வழங்க குறித்த கப்பல் நிறுவனம் இணக்கம் வெளியிட்டது.

இந்தநிலையில், குறித்த கப்பல் நிறுவனத்திடம் இருந்து; மேலும் 100 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.