மைத்திரி, உதவி பேராயர்கள் மூவருக்கு எதற்காக ஜனாதிபதி ஆணைக் குழு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியது ?

aa 2
aa 2

சாட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களை நிராகரிக்கும் வகையில் அறிவித்தல்களை வெளியிடக்கூடாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியோக செயலாளர் மற்றும் உதவி பேராயர்கள் மூவருக்கு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவுறுத்தியது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டமை தொடர்பில்  ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் மூவரால் கையெழுத்திட்டு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டு சில தினங்களின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியாகியது.

சாட்சியாளர்களிடம் சட்டத்தரணிகளால் குறுக்குக் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பை விடுக்க முடியாது என, ஜனாதிபதி ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

ஆகவே, எதிர்காலத்தில் இவ்வாறான அறிவித்தல்களை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா மற்றும் 3 உதவி பேராயர்களுக்கு  ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரித்தது.  

நேற்றைய தினம் இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழு தனது தீர்மானத்தை அறிவித்தே இந்த எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை விடுத்தது.