இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்தில் சிக்கினார்!

WhatsApp Image 2020 02 21 at 3.27.49 PM
WhatsApp Image 2020 02 21 at 3.27.49 PM

இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்தில் சிக்குண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு- கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவரது வாகனம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பதோடு சிறிய அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .