கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க உத்தேசம்!

55 2
55 2

கந்தளாய் சீனி தொழிற்சாலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். 

இந்தக் கைத்தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 25 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 26 வருடங்களாக மூடப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இதனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய போதிலும் அது திறக்கப்படவில்லை.

இதனால் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் சீனி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதியுடன் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .