சிங்கள சினிமா துறையின் மூத்த நடிகர் காலமானார்!

சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகரும் பிரபல நகைச்சுவை நடிகருமான டெனிசன் குரே காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.