ட்ரம்ப் வருமான வரி செலுத்தவில்லை – பிரபல பத்திரிகை குற்றச்சாட்டு

donalt
donalt

டிக் டொக் செயலியை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு தடை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் மேற்கொண்ட தீர்மானத்தை தற்காலிகமாக நீக்குமாறு அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

அதன் பின்னர் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டொக் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும் என்பதால், 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும்’ எனக் காலக் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டிக்-டொக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போது குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 10 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்த தவறியுள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த செய்தியின் படி, ட்ரம்ப் 2016 மற்றும் 2017ஆம் வருடங்களில் 750 அமெரிக்க டொலர்கள் வரையில் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் முற்றாக மறுத்துள்ளார். தான் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், இது தொடர்பிலான முழுமையான அறிக்கை தனக்கு கிடைத்தவுடன் பதிலளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.