சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கு முதலிடத்தை வழங்கவேண்டும்- சஜித்

1
1

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதலிடத்தை வழங்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இன்று (01) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய உலகம் முழுவதிலும் நாள் ஒன்றுக்கு 16,000 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். இவர்களுள் 50 சதவீதமான சிறுவர்கள் மந்த போசனத்தினால் உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளை வீட்டுப் பணியாளர் சேவைகளில் ஈடுபடுத்தல் என்பன பாரிய நெருக்கடிகளாக காணப்படுகின்றன.

இந்நிலையில் மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும் ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.