டெங்குநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!

images
images

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அநுர ஜயசேகர இதனை தெரிவித்தார்.

வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில் 27,733 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளளதாக அவர் கூறினார்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அந்த எண்ணிக்கை 11,608 ஆகும். அதேபோல் இதுவரை 30 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாகவும் டொக்டர் அநுர ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார் .