19க்கு பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் – மயந்த திஸாநாயக்க

முன்மொழியப்பட்ட 20வது திருத்தத்திற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் 19வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 20வது திருத்தத்திற்கு பதிலாக 19வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்கவும் விவாதிக்கவும் தனது கட்சி தயாராக உள்ளது என்றார்.

19 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிப்போம் என்றும் அத்தகைய மாற்றங்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்தை ஆதரிக்கபோவதில்லை என்றும் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் 20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷக்கள் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

அதன்படி 20 வது திருத்தத்திற்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்க எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.