சர்வதேச மது ஒழிப்பு நாள் இன்று !

unnamed
unnamed

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகின்றது இந்த நிலையில் போதை பொருள் பாவனை மற்றும் சிறுவர்கள் மது பாவனைக்கு ஆளாகின்றமை ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு விழிப்புனர்வு வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், மதுபாவனை ஊடாக நடைபெறும் குற்றசெயல்கள் குறித்தும் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுசாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த அறிவுறுத்தலை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.