கிழக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடாத்தப்படும் என்கிறார் பூ.பிரசாந்தன்

625.0.560.320.160.600.053.800.700.160.90 3 1
625.0.560.320.160.600.053.800.700.160.90 3 1

கிழக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடாத்தப்படும்.அதற்கான அழுத்தங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். விரைவில் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 2
625.0.560.320.160.600.053.800.700.160.90 2

ஆரையம்பதி சிறுவர் பூங்காவில் ஆற்றல் பேரவையும், பிரதேச அபிவிருத்தி வங்கியும் இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆற்றல் பேரவையின் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிழக்கு பிராந்திய விரிவாக்கல் பிரிவிற்கான முகாமையாளர் மற்றும் வங்கியின் முகாமையாளர்கள்,உத்தியோகத்தர்கள்,ஆற்றல் பேரவையின் உறுப்பினர்கள்,பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரசாந்தன்,

2017ஆம் ஆண்டிற்கு பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சூழலில் கடந்த அரசாங்கம் இழைத்த மோசமான தவறின் காரணமாக, அந்த அரசுடன் இணைந்து இணக்க ஆட்சி நடத்திய தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்காததன் காரணமாக இன்று வரை கிழக்கு மாகாணசபைத் தேர்தலானது நடத்தப்படாமல் நீண்ட காலமாக தள்ளிச் செல்கின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 1
625.0.560.320.160.600.053.800.700.160.90 1

நாங்கள் கடந்த வாரம் அரசாங்கத்துடன், இது தொடர்பில் பேசியிருந்தோம். மாகாணசபை தேர்தல் நடத்தப்படக்கூடாது.அது தேவையற்றது என பலரும் பல கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

யார் என்ன பேசினாலும் அரசாங்கம் மிகத் தெளிவாக இருக்கின்றது என நாம் நம்புகின்றோம்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மிகத் தெளிவாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மாகாண சபைத் தேர்தல்கள் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்ற போது தான், மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் வருகின்ற போது தான் மாகாணத்திற்குரிய பாடசாலைகள்,வைத்திய சேவைகள், சிறுவர்களுக்கான நலனோம்பல் நடவடிக்கைகள், உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

ஆயுதப்போராட்டம், அகிம்சைப் போராட்டம் என எமது போராட்டத்திற்காக இலங்கையில் கிடைத்திருக்கின்ற ஆகக் குறைந்த எழுத்து மூலமான இந்த மாகாணசபை முறைமையையாவது பூரணமாக பயன்படுத்தி அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான எமது அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக மக்களின் தெரிவாக இருக்கின்ற சூழலில் மிக விரைவில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அரசிற்கு நாங்கள் அதற்கான அழுத்தங்களை கொடுத்திருக்கின்றோம். மிக விரைவில் தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் மக்கள் சேவை வந்ததன் பின்னர் எமது கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு எமது மக்களை வலுவாக்குகின்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.