110 கிலோ கேரள கஞ்சா மீட்பு

481558024d2ffc67ef14945b5f593829
481558024d2ffc67ef14945b5f593829

மன்னார் – சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பெறுமதியுடைய ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி பெறுமதியுடைய 110 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த தொகை கேரள கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட  கேரள கஞ்சா போதைப்பொருளை மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படயினர் முன்னெடுத்து வருகின்றனர்.