ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாத-ஜனாதிபதி!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் குறித்து தனது முகநூலில் ஜனாதிபதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காக விசாரணை மற்றும் விடுவிப்பு தனது ஆட்சியில் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அதிகாரிகளின் குறைபாடுகள் அல்லது செய்த தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.

என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் கைவிட மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன், மேலும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்டவர் எனத் தெரிவித்து ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டநிலையில் அவர் தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து பொலிஸார் அவரை விடுவித்த நிலையிலேயே சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.