யாழ்ப்பாணம் மக்களே விழிப்புடன் இருங்கள்- மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!

Screenshot 20200421 134609 Chrome 1 1024x560 1
Screenshot 20200421 134609 Chrome 1 1024x560 1


“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்களை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய குடும்பப் பெண் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும்  சுகாதார அமைச்சு கொரோனா தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.  

இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், அநாவசியமான நடமாட்டங்களைத் தவிர்த்து வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது இடங்களிலும் வியாபார நிலையங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வழமைபோல் இயங்கும் அரச அலுவலகங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.