சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விளையாட்டு நிகழ்வுகள்!

11111 1
11111 1

சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு மன்னார் தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையங்களை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வு நேற்று (4) மதியம் 2 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் மன்னார் அஞ்சல் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

மன்னார் அஞ்சல் அலுவலக பிரிவுக்குட்பட்ட தபாலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் , உத்தியோகஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த விளையாட்டுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ரெட்ன நாயக்க மற்றும் சிறப்பு விருந்தினராக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினேல்ட் கலந்து சிறப்பித்தார்.

1111 1

விருந்தினராக சாவச்சேரி தாபால் அதிபர் இன்பராஜ் லெம்பேட் மற்றும் யாழ்பாண தாபால் நிலைய காசாளர் -ஜெரோபா, நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான றொஜன் ஸ்ராலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் இறுதியில் நடை பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்னங்கள் வழங்கப்பட்டதுடன் சர்வதேச அஞ்சல் தினத்தையோட்டி எதிர் வரும் 8 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் உத்தியோகஸ்தர்களின் இரத்ததானம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.