ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

1584974046 president 2
1584974046 president 2

அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்குள் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கொவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று (05) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.