ஹெப்படைடிஸ் சி வைரஸ் வைரஸ் கிருமியை கண்டுபிடித்த மூவருக்கு நோபல் பரிசு !

800
800

2020 ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று வழங்கி வைக்கப்பட்ட்து

அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர் மற்றும் சார்ள்ஸ் எம்.ரைஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த மைக்கல் ஹூடன் ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மூன்று விஞ்ஞானிகளும் இரத்தத்தில் பரவும் ஹெப்படைடிஸ் சி வைரஸிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு முக்கிய உலகளாவிய சுகாதார பிரச்சினை என நோபல் குழு அறிவித்துள்ளது