கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களுக்கு விடுத்துள்ள அவசர செய்தி!

அத்தியாவசியமற்ற ஊழியர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கியமாக மினுவாங்கொட, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொட போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று விமான நிலையம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

“தடுப்பு நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கான இடம் மற்றும் புறப்படும் பகுதிகளை தற்காலிகமாகத் தடுத்துள்ளோம்.

பொதுமக்கள் இருக்கும் இடம், வருகை தரும் பயணிகளுக்கான duty-free அணுகல் ஆகியவை அக்டோபர் 4 முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விமான நிலைய ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஸ்ரீலங்கா விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் இயக்குநர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்

மினுவாங்கொடையிலிருந்து சில நிமிடங்களிலேயே கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ளது.

இந்த பகுதிகளில் இதுவரை 69 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 101 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.