பெங்களூரை பதம் பார்த்து டெல்லி!

pic
pic

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19 ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.

டுபாயில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களே எடுத்தது.

இந்த போட்டியில் பெங்களூா் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆடம் ஸம்பா, குா்கீரத்சிங் மான் ஆகியோருக்குப் பதிலாக மொயீன் அலி, முகமது சிராஜ் ஆகியோா் சோ்த்துக்கொள்ளப்பட்டிருந்தனா். அதேபோல் டெல்லி அணி யில் காயமடைந்து வெளியேறிய அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அக்ஸா் படேல் சோ்த்துக்கொள்ளப்பட்டிருந்தாா்.

நாணய சுழற்சியை வென்ற பெங்களூா் முதலில் பந்துவீச தீா்மானித்தது. டெல்லி அணி யின் துடுப்பாட்டத்திற்கு பிருத்வி ஷா – ஷிகா் தவன் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை அளித்தது. அதிரடியாக ஆடிய பிருத்வி ஷா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 42 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

அவரை அடுத்து தலைவர் ஷ்ரேயஸ் ஐயா் களம் இறங்க, மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 32ஓட்டங்கள் எடுத்திருந்த ஷிகா் தவன் பெவிலியன் திரும்பினாா். பின்னா் ரிஷப் பண்ட் களம் காண, ஒரு பவுண்டரியுடன் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷ்ரேயஸ் ஐயா், 12 ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா்.

அடுத்து களமிறங்கிய மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக ஆடி டெல்லியின் ஓட்டவேகத்தை உயா்த்தினாா். மறுமுனையில் ரிஷப் பண்ட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 19 ஆவது ஓவரில் பௌல்டாகினாா். பின்னா் ஷிம்ரன் ஹெட்மைா் களம் கண்டாா்.

20 ஓவா்கள் முடிவில் ஸ்டாய்னிஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 53, ஹெட்மைா் 1 சிக்ஸா் உள்பட 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பெங்களூா் தரப்பில் முகமது சிராஜ் 2, இசுரு உதானா, மொயீன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.

சரிந்த விக்கெட்டுகள் : பின்னா் 197 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல் – ஆரோன் ஃபிஞ்ச் கூட்டணி நல்லதொரு தொடக்கத்தை தரத் தவறியது.

தேவ்தத் 4, ஃபிஞ்ச் 13 ரன்களில் வீழ்ந்தனா். பின்னா் வந்த கோலி மட்டும் நிலைத்து ஆட, டி வில்லியா்ஸ் 9, மொயீன் அலி 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா். அதிகபட்சமாக கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடந் 43 ஓட்டங்களுக்கு வீழ்ந்தாா்.

பின்னா் வந்தவா்களில் வாஷிங்டன் சுந்தா் 17, ஷிவம் துபே 11, இசுரு உதானா 1, முகமது சிராஜ் 5 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனா்.

20 ஓவா்கள் முடிவில் நவ்தீப் சைனி 12, யுவேந்திர சாஹல் ரன்னின்றி களத்தில் இருந்தனா். டெல்லி தரப்பில் ரபாடா 4, அக்ஸா் படேல், நாா்ட்ஜே தலா 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினா்.