நிந்தவூரில் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

vlcsnap 2020 10 06 12h50m24s089
vlcsnap 2020 10 06 12h50m24s089

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும், பரிசோதனைகளும் நிந்தவூர் பிரதேசத்தில் தற்போது இடம் பெற்று வருகின்றன.

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையில் நடைபெற்று வரும் இந்நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், சமூக சேவை நிலையங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற இடங்களில் நடமாடும் சேவையாக இடம் பெற்று வருகின்றன.

  • இதில் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான உணவுப் பழக்க வழக்கங்கள் எவை?
  • அவைகளைக் கண்டறிவதற்கான இரத்தப் பரிசோதனைகள்.
  • புற்று நோய்க்கான அறிகுறிகள் எவை?
  • HIV தொற்றுக்கான அறிகுறிகள் போன்ற பல்வேறு பரிசோதனைகளும் இலவசமாக இடம் பெற்றன.

இந்நிகழ்வின் இறுதியில் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் நஞ்சற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட சத்துணவுகளும் பரிமாறப்பட்டன.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் எம்.எம்.இர்ஷாத், நிந்தவூர் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஹமீட், மருத்துவ மாதுக்கள், தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.