மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 2
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 2

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 246 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக தொற்றுறுதியான பெண் மற்றும் அவரின் மகள் தவிர்ந்த 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில், மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.