வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

IMG d988dfb70c20cfa399e024809d0d1c4e V
IMG d988dfb70c20cfa399e024809d0d1c4e V

2020ம் ஆண்டுக்கான வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் 112 கிலோ தூக்கி நி. சுஸ்மிதாகினி 1ம் இடத்தையும், 49 கிலோ எடைப்பிரிவில் 88 கிலோ தூக்கி ச.நிதர்ஷினி 2ம் இடத்தையும், 81 கிலோ எடைப்பிரிவில் 74 கிலோ தூக்கி இ. கஜனிகா 3ம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஞானஜீவன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.