சம்மாந்துறை பிரதேசத்தின் கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம்

IMG 20201007 WA0005
IMG 20201007 WA0005

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று நோயிலிருந்து எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் விஷேட கூட்டம்  நேற்று  (06) பி.ப. 02.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

IMG 20201007 WA0002


இக் கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் ,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், சமயத் தலைவர்கள்,கோவில் பரிபாலண சபை பிரதி நிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள்  பிரதேச செயலக கொரோனா பாதுகாப்புச் செயலணிக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பொறுப்புவாய்ந்தவர்களும்  அவற்றை கடைப்பிடித்து நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

IMG 20201007 WA0003 1


கொரோனா பாதுகாப்பு செயலணியின் விஷேட அறிவித்தல்
தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தெற்றிலிருந்து தம்மைத் தற்கத்து தெற்றைத் தடுக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் நிலையம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் இலங்கை இராணுவத்தினர் கூடி  பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றை கட்டாயம் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
1.கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்தல்.
2. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள கம்பஹா, மொனராகலை, யாழ்ப்பாணம் போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து எமது பிரதேசத்துக்கு வருகைதரும் நபர்கள் தொடர்பான தகவல்களை கிராம சேவகரிடம் அறிவிக்கவேண்டும் என்பதோடு அவ்வாறு வருகை தந்தவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சுயதனிமைப்படுத்தல் நிலையத்துக்கு குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்படுவர். மேலும் தகவல்களை மறைத்தவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

IMG 20201007 WA0003

3. தனியார் பிரத்தியோக வகுப்புக்கள்  மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தல் வேண்டும்.
4. பொது மக்கள் பொதுவாக ஒன்றுகூடக்கூடிய திருமணம், மரணவீடு போன்ற இடங்களில் கொவிட் – 19 தொடர்பான சுகாதார நடைமுறைளைப் பேணுமாறும் அவசியமற்ற ஒன்று கூடல்கள், சுற்றுலாக்கள், மற்றும் பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
5. சகல கடைகள், பொது இடங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள கைகழுவுவதற்கான ஏற்பாடுகளை மீள நடைமுறைப்படுத்துவதுடன் கொவிட் – 19 சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பேணவேண்டும்.
6. சம்மாந்துறையின்  எல்லைப் புறங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுமாறும் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
7.பொதுக் கழியாட்ட இடங்கள் சிறுவர் பூங்காக்களை தற்காலியமாக மூடுதல்.
8.கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய மத நிறுவனக்களின் பிரதி நிதிகள் தத்தமது மதங்களின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல்.
மேற்படி அறிவுறுத்தல்களை பேணி நடக்குமாறும் தவறும் பட்சத்தில் கடுமையான சட்டநடிவடிக்கைகளுக்கு முகக் கொடுக்க நேரிடும் என்பதையும் அறியத்தருகின்றோம்.