20 ஆவது திருத்தம் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்பு – எதிர்கட்சி ஆதங்கம்!

z p 12 Imthiaz
z p 12 Imthiaz

இலங்கையின் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்பு ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான முன்னெடுப்புகளே காணப்படுகின்றன. மேலும் குறித்த சட்ட மூலம் மீள்திருத்தல் செய்தது தொடர்பில் எந்தவித பதிலயும் அரசு தரவில்லை.

ஆகவே எதிர்வரும் தலைமுறையினருக்கு ஜனநாயக ஆட்சியையை ஒப்படைக்க போகின்றோமா? அல்லது சர்வாதிகார ஆட்சியை ஒப்படைக்க போகின்றோமா? என்பது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.