வவுனியா நகரசபை சுகாதார ஊழியர் 04 பேரின் பணித்தடை நீக்கக்கோரி மேன்முறையீடு

IMG 20201008 081622
IMG 20201008 081622

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர் 04 பேரின் பணித்தடை நீக்கக்கோரி இ.சித்திரன், ச.புவிதரன், ஜே.அன்ரனி, மு.மகேந்திரன் ஆகியோரால் வடமாகாண ஆளுனருக்கு மேன்முறையீட்டு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்களாகிய நாம் கடந்த 07.09.2020 தொடக்கம் 10.09.2020 ம் தேதி வரை எம்முடன் சேவையாற்றும் சக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி சாத்வீக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தோம். எங்களது கோரிக்கை நியாயமானதாகவும் இருந்தது. இருப்பினும் சிற்றுழியர்கள் எமக்கு கிடைக்க நியாய சம்பள அதிகரிப்பினை 2014ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படாமல் நகரசபை செயலாளர்களால் தொடர்ந்து தடுத்து வரப்பட்டுவதுடன் எமது நியாயமான கோரிக்கையினை மறுத்து வருவதுடன் எம்மை மிகவும் ஒடுக்குவதற்காக பல்வேறு வழிகளில் எம்மை பயமுறுத்துகின்றனர், பழிவாங்குகின்றனர்.

இந்த வகையில் கடந்த சாத்வீக போராட்டத்தினை நேர்த்தியான முறையில் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் எங்கள் மேல் பொருத்தமான எவ்விதமான குற்றசாட்டுக்களும் வைக்க முடியாத சந்தர்ப்பத்தில், போராட்டத்திற்கு அல்லது நகரசபையில் நிர்வாக செயல்களுக்காக சம்பந்தப்படாத சில சம்பவங்களையும் பொய்யாக எம்மீது சாட்சியாளர்களையும் இணைத்து குற்ற பத்திரிகை மற்றும் பணித்தடை செய்தும் கடிதங்கள் வழங்கியுள்ளனர்.இச்செயலானது எமக்கு பாரிய அநீதியாக காணப்படுகிறது. சாதாரணமாக வாழும் உரிமைக்காக தரவேண்டிய சம்பளத்தை கோரியது குற்றமா?

எங்கள் குடும்பத்தில் குடும்பத்தலைர் கணவர் மட்டுமே வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றோம். எங்கள் மனைவி, பிள்ளைகள், எமது பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய பொறுப்புக்கள் உள்ளது.

கடந்த நாட்களில் கொரோனா (Covid -19) பரவியிருந்த நேரத்தில் கூட மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் நாங்கள் கடுமையான சுகாதார பணிகளை செய்து வந்தோம்.

அம்மணி, இதுவரையில் எங்களை நியாயமாக விசாரிப்பார்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை எனவே தயவு கூர்ந்து 2020.10.01 முதல் பணித்தடை செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் இப் பணித்தடையினை ரத்து செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டும் கொள்வதுடன் எமது நியாயமான கோரிக்கையினை தங்களது நேரடி பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கும் படியும் மேலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அக்கடிதத்தில் உள்ளது.

IMG 20201008 081622 1
IMG 20201008 081622 1