கோவிட் 19 தொற்று நோய் தொடர்பில் இராணுவத்தளபதி விடுக்கும் அவசர எச்சரிக்கை !

நாட்டில் தற்பொழுது அதிகரித்துள்ள கோவிட் 19 தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்ப்பினை பேணிய அனைவருக்குக்கும் அடுத்த 7 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று இராணுவ தளபதியும், தேசிய கொரோன தடுப்பு மையத்தின் தலைவருமான மேஜ ர்ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார் .

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் பயன்படுத்திய இடங்கள், அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் அவர்கள் செல்லும் கடைகள் மீது கவனம் செலுத்தி அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு அடுத்த ஏழு நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும் இராணுவ தளபதி கூறினார்.

இதன் பின் ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்பட்ட நபர்களைக் காணக்கூடி வரும்.

இதையடுத்து அந்த பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார் .