மக்களின் கஸ்டங்களை போக்கி அவர்களை ஆட்சி செய்யும் முறையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் -பழனி திகாம்பரம்

திகாம்பரம் 756x420 1
திகாம்பரம் 756x420 1

புதிய சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஆட்சி செய்ய நினைப்பதை விட மக்களின் கஸ்டங்களை போக்கி அவர்களை ஆட்சி செய்யும் முறையை அரசாங்கம் கடைபிடித்தால் நீண்ட பயணம் செல்லலாம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்
“இன்று நாட்டு மக்கள் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமையுடன் கஸ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதேவேளை மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பளம் என்பது வெறும் கனவாக வே மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டார்

இதேவேளை தற்போதைய அரசாங்கமானது மலையக மக்களுக்கு நாளொன்றுக்கான அதிகூடிய வேதனமாக ஆயிரம் ரூபாவினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் பொதுத்தேர்தல்காலத்திலும் ஏன் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இறுதி நிகழ்விலும் கூறியது அது இன்று வெறும் வாய் பேச்சாகவே மாறியுள்ளது எனவும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.

அதேசமயம் கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் குளவிகள் நாள்தோரும் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கஸ்டத்திற்கு மேல் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.