புங்குடுதீவில் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை

625.500.560.350.160.300.053.800.900.160.90 15
625.500.560.350.160.300.053.800.900.160.90 15

 

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முடக்கப்படுள்ள புங்குடுதீவுப் பகுதியில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு பரீட்சைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று அபாயத்தால் புங்குடுதீவில் தற்போது 3 ஆயிரத்து 915 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு ஜி.சீ.ஈ. உயர்தரம் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான பரீட்சைகள் இப்பகுதியிலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்துக்குச் செல்லும் மேற்பார்வை ஆசிரியர்களுக்குத் தினமும் பாதுகாப்பு உடை வழங்க சுகாதாரத் திணைக்களம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் நடைபெறும் பரீட்சைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.