மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு..

Corona Cbe Updatenews360 4
Corona Cbe Updatenews360 4

கோவிட் 19 நோய் தொற்றுக்குள்ளான மேலும் 35 பேர் நேற்றும் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளார்.