மட்டக்களப்பில் புலமை பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது

DSC0373 1
DSC0373 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748  மாணவர்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொரோனோ தொற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோற்றியுள்ளனா்

DSC0329
DSC0329


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்  காரணமாக   தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  தோற்றவுள்ள மாணவர்களின்  பாதுகாப்பு நலன் கருதி  கல்வி  மற்றும் சுகாதார  அமைச்சின் பணிப்புரைக்கு   அமைய  சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்பட்டு பரீட்சை நடைபெறுகின்றது 

DSC0371
DSC0371


இதனையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா , பட்டிருப்பு , மண்முனை மேற்கு  ஆகிய  05   வலயங்களில்  103   பரீட்சை நிலையங்களிலும்  13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் 9748  மாணாவர்கள்   பரீட்சைக்கு  தோற்றுகின்றனர் 

DSC0339
DSC0339


இன்று பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணியாது வந்த மாணவர்களின் பெற்றேர்களை பொலிசார் திருப்பிஅனுப்பி முகக்கவசம் எடுத்துவரப்பட்டு மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுமதிகப்பட்டனர்.

DSC0373
DSC0373


இதே வேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின்  சுகாதார பாதுகாப்பு  நடைமுறையின்  கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2, 936   பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள்  தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . 

DSC0375
DSC0375