முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பு குறைப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இவ்வாறு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த 100 விசேட அதிரடிப்படை காவல்துறை உத்தியோகத்தர்களில் 94 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டுள்ள 100 காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையையும் 54 ஆக வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு 200 காவல்துறை உத்தியோகத்தர்களிலிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த வீட்டையும் இரண்டு மாதங்களில் மீள ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.