வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் யாசகர்கள்!

171110125526 indian beggars hyderabad 3 full 169
171110125526 indian beggars hyderabad 3 full 169

வவுனியா நகர் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த மேலும் தெரியவருவதாவது

வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த யாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் நகரப்பகுதிக்கு செல்வோரிடம் யாசகம் கேட்கின்றனர். அத்துடன் வவுனியா நகரம் மற்றும் வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் இரவு வேளைகளில் உறங்குகின்றனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் யாசகர்கள் நடமாடுவதாலும், வர்த்தக நிலையங்களின் முன்னால் உறங்குவதாலும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் வவுனியா காவல் துறையினர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், யாசகர்கள் கடைகளின் முன்னால் துங்குவதால், தாம் தினமும் கடைகளின் முன்னால் கிருமி நீக்கம் செய்ய வேண்டியுள்ளது எனவும் வர்த்தகர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.