கடற்றொழில் மீனவர்களுக்கு எச்சரிக்கை

fishermen
fishermen

வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, தாழமுக்கம் காரணமாக வடக்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் இந்தக் காலநிலை தொடரும் பட்சத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாகத் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.