உரிய முறைமைகளுக்கு அமையவே அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு பணம் வழங்கப்பட்டது!

unnamed 9 1
unnamed 9 1

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் 39 லட்சம் ரூபா பணம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு உரிய முறைமைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை பரிசோதகர் டயஸ் பத்மஸ்ரீ, கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த முறைப்பாட்டின் சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை பரிசோதகர் டயஸ் பத்மஸ்ரீயிடம் பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டதரணி நளின் லந்துவஹெட்டி குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்த விசாரணையின் போது பிரதிவாதி மஹிந்தானந்த அலுத்கமகேவின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை பரிசோதகர் டயஸ் பத்மஸ்ரீ, பிரதிவாதியின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என ஏற்றுக்கொண்டார்.