யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை!

கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் சற்றுச் சரிவைச் சந்த்தித்திருந்தாலும் இன்று தங்கத்தின் விலை 300 ரூபாவால் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (16 ) 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 95 ஆயிரத்து 150 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 94 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதுடன், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை இன்னும் உயர்வைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 கரட் தூய தங்கம் இன்று ஒரு பவுண் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.