மைக்பொம்பியோவின் இலங்கை பயணம் தொடர்பில் வெளியாகி புதிய தகவல் !

Mike Pompeo 300x183 1
Mike Pompeo 300x183 1

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைப் பயணம் இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இராஜாங்க செயலாளரின் பயணம் தொடர்பாக வினவியவேளை மைக் பொம்பியோவின் பயணம் குறித்து இன்னமும் உத்தியோகபூர்வமாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது என ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது