மருதமுனையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டம்

1212 2
1212 2

மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கிளையின் விஷேட கூட்டம் கிளையின் தலைவர்,
எம்.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இன்று (18) இடம் பெற்றது.

இதில் மருதமுனையின் சமகால அரசியல் நிலைமைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள், ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குதல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பேசப்பட்டதுடன் ஜனாதிபதி, பிரதமரின் கொள்கை திட்டங்களுக்கு அமைய வருங்கால செயற்திட்டங்களை முன்னெடுப்பது எனவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின் கிளையின் செயலாளர் ஜ.எல்.எம். முதுலித்தீன் அவர்களுக்கு கிளையின் பிரதம ஆலோசகர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் அவர்களால் பொதுஜன பெரமுன கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் பொருளாளர் எம்.ஆர்.எம்.றிஸ்லி அவர்களிடம் கிளையின் பதிவுக்கான ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .