அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி முன்னிலை!

president11x
president11x

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (19) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதேவேளை, கட்டாய விடுமுறையில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரும் குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சாட்சி வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.