1326 என்ற இலக்கத்தை வழங்காமை பாரதூரமான விடயமாகும்

ajith perera
ajith perera

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் நேற்றைய தினம் அவசர கலந்துரையாடல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டிருந்தது. இதன் நிறைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து தெரிவிக்கையில்

நாட்டின் பிரஜைகள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கவும் தகவல்களை வழங்கவும் 1326 என்ற இலக்கத்தை புதிய ஜனநாயக முன்னணிக்கு வழங்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது.

எனினும், அந்த உத்தரவை மீறும் வகையில் தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷாமல் ஜயதிலக்க, தான்தோன்றித்தனமாக சட்டவிரோதமாக வேறு ஒரு இலக்கத்தை வழங்குவது தொடர்பாக கதைத்தார். இந்த நிலை நீடித்தால் குறித்த நபர்கள் தொடர்பாக தகவல்களை வெளிக்கொண்டு வருவதற்கு நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழு 1326 என்ற இலக்கத்தை வழங்குமாறு கூறியும் அது வழங்கப்படாமை பாரதூரமான விடயமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.