2021 ஆண்டுக்கான கால போக நெற்செய்கை தொடர்பான விவசாய குழு!

1 3 3
1 3 3

மன்னர் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கால போக நெற்செய்கை தொடர்பான விவசாய குழு கூட்டம்

மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (19) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்டதில் விவசாய உற்பத்திகளை தன்னிறைவை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விவசாய செய்கைகளை பாதிக்கும்

கிருமிகள் மற்றும் தத்துக்கிளி தாக்கம் தொடர்பாக விவசாய ஆரய்சி உதவிப் பணிப்பாளர் ஊடாகவும்,கால் நடை மேய்சல் தரைகள் மற்றும் கால் நடைகளுக்கு ஏற்படும் கால்வாய் நோய் மற்றும் ஏனைய நோய்களை கட்டுப்படுதுவது தொடர்பாகவும்

அதனூடாக கால் நடை வளர்ப்பாளர்கள் இலாபம் பெறுவதற்கான செயற்பாடுகள் தொடர்பாக கால் நடை அபிவிருத்தி பணிப்பாளர் ஊடாகவும் தெளிவு படுத்தப்பட்டது.

அதே நேரத்தில் கால போக செய்கையின் போது தரமான விதைகளின் பயன்பாடு தொடர்பாகவும் தரமான விதைகளை பயன்படுத்தி

அதிக விளைச்சளை பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக விதை ஆரய்ச்சி உதவிப் பணிப்பாளரினால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் விவசாய திணைக்களத்தின் கீழ் செயற்படும் அனைத்து அலுவலகங்களின் உதவிப்பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள்,

மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.