20 ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றின் நிலைப்பாட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் தெரியப்படுத்தினார்.

அந்த சரத்துக்களுக்கு ஒப்புதல் பெறவோ அல்லது மாற்றங்களை மேற்கொள்ளவோ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்து உயர் நீதிமன்றம் ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதனை சபாநாயகருக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.